தர்மேந்திர பிரதான் ராஜினாமா; புதிய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு..! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்ற போது காவத்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர்.

இதன்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக வன்முறை வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தமை நாட்டை உலுக்கியது.

இதனையடுத்து நாடு தழுவிய வகையில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதனையடுத்து சிஜேபி பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களின் முக்கிய கோரிக்கையாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான். அதன்படி, இன்று தர்மேந்திர பிரதான் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து, பிரதமர் மோடியின் பரிந்துரையின் அடிப்படையில், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.இதனையடுத்து , நாட்டின் புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கல்வி அமைச்சர் பதவியை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து பாஜகவில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில்,  மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக இருந்த பிரகலாத் ஜோஷி-க்கு கல்வித்துறையை கூடுதலாக ஒதுக்கி தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prahlad Joshi gets additional responsibility as new Education Minister


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->