டி20 உலகக் கோப்பை: ஹசரங்க, தீக்ஷனா சுழலில் வீழ்ந்த அயர்லாந்து; 20 ரன்களில் வெற்றி ஈட்டிய இலங்கை..!
Sri Lanka defeated Ireland by 20 runs in the T20 World Cup match
10 வது, டி20 உலகக் கோப்பை தொடரின் 06-வது லீக் போட்டி இலங்கை கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை, அயர்லாந்து அணிகள் மோதின. போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில், பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி, முதலில் தட்டு தடுமாறி ஆடியது. இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 06 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அணியின் சார்பில் குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கமிந்து மெண்டிஸ் 19 பந்தில் 44 ரன்கள் எடுத்து அணியின் ரன் எண்ணிக்கையை திறக்க உதவினார்.

164 என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 19.5 ஓவரில் 143 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் லீக் போட்டியில்முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை அணி சார்பில் ஹசரங்க, தீக்ஷனா தலா 03 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வெல்லகே , சமீர தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
English Summary
Sri Lanka defeated Ireland by 20 runs in the T20 World Cup match