நெல்லையில் காவலர்கள் அதிரடி சோதனை...! - குறுக்குத்துறையில் 1.80 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய மாரிமுத்து கைது...!
Police conduct raid Nellai Marimuthu arrested after being caught 1point80 kg ganja crossroad
நெல்லை மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறுக்குத்துறை அருகே காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்திப்பு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (29) என்பவர் மீது கவனம் செலுத்தப்பட்டு, அவரை நிறுத்தி விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையில், அவர் சட்டவிரோதமாக விற்பனை நோக்கில் மறைத்து வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்டு உயிருக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சுமார் 1 கிலோ 80 கிராம் அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாரிமுத்து கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Police conduct raid Nellai Marimuthu arrested after being caught 1point80 kg ganja crossroad