சிவகங்கையில் அதிர்ச்சி தீர்ப்பு! பேத்தி வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை...! - நீதிமன்றம் கடும் உத்தரவு
Shocking verdict Sivagangai old man who harrassment granddaughter sentenced 61 years prison Court issues strict order
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ (68). கூலி தொழிலாளியாக வாழ்ந்து வந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு தனது பேத்தி உறவு முறையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக மனதை உலுக்கும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கொடூர சம்பவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருந்தது உறுதி செய்யப்பட்டு குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் நடத்திய விரிவான விசாரணையில், இந்த குற்றச் செயலில் ராஜூவின் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்த வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜூவுக்கு சிறுமியை மிரட்டிய குற்றத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனை, பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை, உறவுமுறையை மீறிய தகாத செயல் குற்றத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை, சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்கு மேலும் 20 ஆண்டு சிறை தண்டனை என தனித்தனியாக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனைகள் அனைத்தும் தொடர்ச்சியாக அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மொத்தம் 61 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Shocking verdict Sivagangai old man who harrassment granddaughter sentenced 61 years prison Court issues strict order