கன்னியாகுமரியில் அரசியல் சூடு! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 20-ந் தேதி தேர்தல் பிரசாரம்...! - பெரும் எதிர்பார்ப்பு
Politics heats up Kanyakumari Congress leader Mallikarjuna Kharge campaign elections 20th
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் முழுவதும் பிரசார சூடு உச்சத்தை எட்டியுள்ளது. தி.மு.க. கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான தலைவர்கள் இதுவரை தமிழகத்தில் நேரடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாதது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகிற 18-ந் தேதி காலை 11.30 மணிக்கு பொன்னேரி தொகுதி, மதியம் 1 மணிக்கு சோளிங்கர் தொகுதி, மாலை 4 மணிக்கு திருச்சி துறையூர் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான முக்கியமான கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், அந்த தேதியில் ராகுல் காந்தியின் தமிழக பயணம் சாத்தியமில்லை என்றும், மாற்றாக 19-ந் தேதி வருகை இருக்கலாம் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், வருகிற 20-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கன்னியாகுமரியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் குளச்சலில் நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்கலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் சூழலை மேலும் சூடுபடுத்தியுள்ளது.
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், அந்த நிகழ்வுகளில் தி.மு.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து அவர் பங்கேற்பாரா என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் அதிகரித்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில் ராகுல் காந்தியின் வருகை எப்போது என்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
English Summary
Politics heats up Kanyakumari Congress leader Mallikarjuna Kharge campaign elections 20th