20 மணிநேரம் இளம்பெண்ணை சிறைவைத்து பலாத்காரம் செய்ததாக புகார்; சமூக வலைதள பிரபலம் அதிரடி கைது; உண்மையில் நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஷாமிக் அதிகாரி. இவர் 'நான்சேன்' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் நையாண்டி வீடியோக்கள் மற்றும் அரசியல் விமர்சனங்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானவர். 

குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள குறைகள் தொடர்பாகப் பல்வேறு கருத்துகளைத் தனது வலைத்தளங்களில் மூலம் தெரிவித்து வருபவர். மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசிற்கு எதிரான நிலையில் இயங்கி வருபவர்.

இந்நிலையில், கடந்த 03-ஆம் தேதி 22 வயது இளம்பெண் ஒருவரைத் தனது வீட்டில் சுமார் 20 மணி நேரம் சட்டவிரோதமாகச் சிறை வைத்ததாக ஷாமிக் அதிகாரி மீது புகார் எழுந்தது.

அத்துடன், குறித்த பெண்ணைக் அவர் கொடூரமாகத் தாக்கி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், பெஹாலா போலீசார் கடந்த 04-ஆம் தேதி அவரைக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் குறித்த மருத்துவ ஆதாரங்களை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனையடுத்து அலிப்பூர் நீதிமன்றம் அவரை வரும் 16ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து ஷாமிக் அதிகாரியின் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், 'இருவரும் நீண்ட கால நண்பர்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதத்தில் அவர் அந்தப் பெண்ணை அறைந்தாரே தவிர, பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபடவில்லை' எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social media personality Shamik Adhikari was dramatically arrested for imprisoning and raping a young woman


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->