Eugenics கோட்பாடு; 20 பெண்களிடம் ஒரே நேரத்தில் தனது விந்தணுக்கள் மூலம் Super Race- மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்..? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தற்போது பேசும் பொருளாகியுள்ள முக்கிய விஷயம் ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்தான். இந்த கோப்புகளில் படி, சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்துள்ளார்.

ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது முக்கிய வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக நீதிமன்ற உத்தரவின்படி இந்த வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, கிளிண்டன், அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த கோப்புகளின் படி, Super Race மனித இனத்தை எப்ஸ்டீன் உருவாக்கத் திட்டமிட்டிருந்தது தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின்படி, அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள தனது 10,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜோரோ ராஞ்ச் எஸ்டேட்டில், ஒரே நேரத்தில் 20 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தனது விந்தணு மூலம் கருத்தரிக்கச் செய்ய அவர் திட்டமிட்டிருந்தாக கூறப்பட்டுள்ளது.

இந்த மரபணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கர்ப்பத்திலேயே அசாதாரண ஆற்றல்களையும் அறிவுத்திறனையும் வழங்கி தனது மரபணுக்களைக் கொண்ட ஒரு 'Super Race' மனித இனத்தை உருவாக்க அவர் விரும்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் தூய ஆரிய இன சந்ததியினரை உருவாக்கி, மனித இனத்தை மேம்படுத்த வேண்டும் என்ற விபரீத எண்ணம, ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு இருந்துள்ளது.முன்னதாக 20-ஆம் நூற்றாண்டில் ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் பின்பற்றிய Eugenics கோட்பாடு இதுவாகும்.

அதாவது, ஹிட்லர் ஜெர்மனியில் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் சில கிராமங்களில் இந்த பரிசோதனை ரகசியமாக பார்க்கப்பட்டது என கூறப்படுகிறது. இதே பாணியில் தான் எப்ஸ்டீன், தற்போதுள்ள நவீன அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தி  தனது விருப்பத்தை நிறைவேற்ற முடியும் என்று நம்பியுள்ளார்.

தனது இந்த விசித்திர எண்ணங்களுக்கான இந்தத் திட்டங்களுக்கு ஒரு அறிவியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளைத் தனது தனித்தீவுக்கு அழைத்து விருந்தளித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களுக்குப் பல மில்லியன் டாலர்களை நிதியுதவியாகவும், வழங்கியுள்ளார். அதாவது, தான் இறந்த பிறகு தனது உடல், குறிப்பாகத் தலை மற்றும் பிறப்புறுப்பு ஆகியவற்றை உறைநிலையில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும், எதிர்காலத் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உயிர் பெற முடியும் என்றும் அவர் நம்பியுள்ளார் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did Epstein plan to create a Super Race of humans by impregnating 20 women simultaneously with his sperm


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->