ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடி! எண்ணெய் குழாய் மீது உக்ரைன் தாக்குதல்...!
Retaliation to Russia attack Ukraine attacks oil pipeline
கடந்த 3 ஆண்டுகளை கடந்தும், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடிக்கிறது.இந்நிலையில், ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நள்ளிரவில் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களை குறிவைத்து நடத்தியது.

மேலும், கீவ்வின் பெச்செர்ஸ்கி மாவட்டத்தில் இருக்கும் அமைச்சரவை கூடும் அரசு கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.இதனால் கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. சற்றும் தாமதிக்காமல் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், அரசு கட்டிடத்தின் கூரை மற்றும் மேல் தளங்கள் சேதமடைந்திருப்பது இதுவே முதல் முறை என உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ தெரிவித்தார்.
இதில் கீவ் நகரில் பல கட்டிடங்கள் தாக்குதலுக்கு உள்ளானதில், குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயம் அடைந்தனர்.
அதே நேரத்தில், கார்கிவ், ஒடேசா,டினிப்ரோசபோரி ஷியா உள்ளிட்ட நகரங்களிலும் ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியது.இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்,ரஷியாவின் எண்ணெய் குழாய் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Retaliation to Russia attack Ukraine attacks oil pipeline