பொது அமைதியைக் காக்கும் நோக்கம்; பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், அருகில் இறைச்சி, மீன் கடைகள் இயங்க தடை; பீஹார் அரசு முடிவு..!
Bihar government decides to ban meat and fish shops from operating near schools and temples
பீஹாரில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசின் முயற்சியாக, பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன்களை வெளிப்படையாக விற்பனை செய்வதற்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்துப் அம்மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பேசியதாவது;
சுகாதாரத்தைப் பேணுதல் மற்றும் பொது அமைதியைக் காக்கும் நோக்கில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்வதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதும், குழந்தைகளின் மன நலனில் எதிர்மறைத் தாக்கங்கள் ஏற்படுவதைத் தடுப்பதும் இந்தத் தடையின் முக்கிய நோக்கமாங்க கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவுக் பழக்கவழக்கங்களில் தலையிடுவது அரசின் நோக்கமல்ல என்று மாநில துணை முதல்வர், கூறியுள்ளதோடு, ஆனால், அதே நேரத்தில் பொது இடங்களின் தூய்மை மற்றும் புனிதத்தன்மை கெடாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியமானது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கட்டுப்பாடுகள் யாருடைய உணர்வுகளும் புண்படாத வகையிலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையிலும் குறித்த விதிகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Bihar government decides to ban meat and fish shops from operating near schools and temples