எடுத்த முடிவில் உறுதி! அசராத எடப்பாடி பழனிசாமி எடுத்த மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை!
ADMK EPS sathyabama sengottaiyan
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து, அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சிப் பொறுப்புகளையும் நீக்கியுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் எம்.பி. ஏ. சத்தியபாமா இன்று முதல் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களாகவே அதிமுக தலைமை மீது அதிருப்தி கொண்டிருந்த செங்கோட்டையன், சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டுமெனில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும். இதற்கான முடிவை பொதுச் செயலாளர் எடுக்கலாம். பத்து நாளுக்குள் முயற்சி செய்யாவிட்டால் நாமே ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வோம். இந்தக் கோரிக்கைக்கு தீர்வு வந்தால் மட்டுமே பழனிசாமியின் பிரசாரத்தில் பங்கேற்பேன்” என்று வெளிப்படையாகக் கூறினார்.
இந்தக் கருத்தைத் தொடர்ந்து செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இதற்குப் பின்னர், கோபி தொகுதியைச் சேர்ந்த பல ஒன்றிய மற்றும் கிளை செயலாளர்கள் பதவியை ராஜினாமா செய்து செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்தனர். சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமாவையும் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி இன்னொரு நடவடிக்கை எடுத்துள்ளார்.
English Summary
ADMK EPS sathyabama sengottaiyan