விஜய் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட காங்கிரஸ்! காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவு.. பரபர தகவல்! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியோடுதான் பயணிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர், தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், அடுத்தாண்டு ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி, கூட்டணியில் எத்தனை தொகுதிகளைப் பெறுவது போன்ற முக்கிய அம்சங்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, திமுக கூட்டணியோடு தொடர்வதோடு, கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடாங்கர், “தமிழகத்தில் சுமார் 22 ஆயிரம் கிராமங்களில் காங்கிரஸ் கிராமக் கமிட்டிகளை அமைத்துள்ளது. 76 லட்சம் மக்களிடம் இருந்து வாக்குத் திருட்டுக்கு எதிரான கையெழுத்துகளை பெற்றுள்ளோம். வாக்குச்சாவடி முகவர்களை வலுப்படுத்தி, 234 தொகுதிகளில் அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 125 தொகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம்” என கூறினார்.

மேலும், “கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்பது, ஆட்சியில் பங்கு கேட்பது ஆகியவை குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர்ச்சியால் கூட்டணி கட்சிகளும் பயன் அடைவார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜயுடன் ராகுல் காந்தி பேசியதாக தகவல் வெளியானது. இதனால், தவெக – காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா? என்ற அரசியல் பேச்சு எழுந்தது. ஏனெனில், விஜய் இதுவரை காங்கிரஸை ஒருபோதும் விமர்சிக்கவில்லை என்பதும், ராகுல் காந்தியுடன் நல்ல உறவு வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தற்போது காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியோடுதான் பயணம் தொடரும் என முடிவு செய்யப்பட்டிருப்பது, தவெகாவின் அரசியல் பிளானுக்கு பெரிய சவாலாகி விட்டது.

அதாவது, 2026 தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியை உடைக்க முயன்ற தவெகாவின் திட்டம் தோல்வியில் முடியும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

திமுக கூட்டணியை வலுப்படுத்தும் காங்கிரஸின் முடிவு, அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கான அரசியல் சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress has crushed Vijay dream Important decision taken at the Congress Working Committee meeting Strange information!


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->