சினேகனின் தந்தை மறைவு! கமல்ஹாசன் இரங்கல்! - Seithipunal
Seithipunal



தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை மறைந்தார். வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் புதுக்காரியப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.

இந்த துயரச் செய்தியை சினேகன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில், “எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எங்கள் சொந்த ஊரான புதுக்காரியப்பட்டியில் நல்லடக்கம் நடைபெறும். திரையுலக நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் என் வணக்கங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சினேகனின் தந்தை மறைவுச் செய்தி வெளியானதும், திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் சினேகனுக்கு ஆறுதல் சொல்வதற்கான பதிவுகள் தொடர்ந்து வெளிவந்து வருகின்றன.

மாநிலங்களவை எம்பி கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "என்னுடைய அன்புக்குரிய தம்பியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகன் அவர்களது தந்தையார் சிவசங்கு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். 

தம்பி சினேகனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MNM Sinegan dad deat kamal condolence


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->