த.வெ.க.யில் அதிரடி மாற்றம் – பாண்டிக்கு பார்சல் கட்டப்படும் புஸ்ஸி! தவெக பொதுச் செயலாளராகும் ஆதவ்! விஜய் எடுக்கப் போகும் முடிவு? - Seithipunal
Seithipunal


2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) பெரிய மாற்றங்களை அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளார் கட்சித் தலைவர் விஜய்.

புதிய தகவல்களின் படி, தற்போதைய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட உள்ளார். அதேசமயம், ஆதவ் அர்ஜூனா கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்கலாம் என கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், இன்னும் அரசியல் தாக்கத்தை உருவாக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் எதிர்மறையாகச் சென்றதையடுத்து, கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விஜய் தீவிரமாக ஆராய்ந்துள்ளார்.

இதையடுத்து, செயல்படாத மாவட்டச் செயலாளர்களை மாற்றி, புதிய முகங்களுக்கு பொறுப்பளிக்கத் தீர்மானித்துள்ளார். அர்ஜூனாவை பொதுச் செயலாளராக நியமிப்பதன் மூலம், கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் விஜய் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், மக்கள் பிரச்சனைகள் குறித்து திறந்தவெளியில் கருத்து தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் தான், புதிய தலைமையைக் கொண்டு வர விஜய் முடிவு எடுத்திருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், புதுச்சேரி மாநிலம் விஜய்க்கு உறுதியான ஆதரவைக் கொண்டிருப்பதால், அங்கு புஸ்ஸி ஆனந்த் மாநிலத் தலைவராக நியமிக்கப்படலாம். இதனுடன், சிடிஆர் மல்குமார், அருண் ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவட்ட அளவில் பல நிர்வாகிகள் கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பாக இல்லாதது குறித்து விஜய் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால், புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல விஜய் திருச்சியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு கட்சியின் மனிதநேய முகத்தைக் காட்டும் வகையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா பொதுச் செயலாளராக வருவது உறுதி என்ற செய்தி கட்சி வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சில நிர்வாகிகள் இதை அவதூறு செய்தி என மறுத்து வருகின்றனர்.

எனினும், விஜய் தலைமையிலான த.வெ.க. தற்போது அதிரடி மாற்றத்தின் நெருக்கடிக்காலத்தில் இருப்பது உறுதி.
அவரது அடுத்த முடிவு, கட்சியின் எதிர்கால அரசியல் பாதையை தீர்மானிக்கக்கூடும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dramatic change in TVK A parcel will be tied to Pandi pussy Aadhav will be the TVK general secretary What decision will Vijay take


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->