2026 தேர்தலை முன்வைத்து சீமான் புதிய வியூகம் – சாதி பார்த்து சீட் கொடுக்கும் சீமான்? தடுமாறும் தம்பிகள் நாதகத்தில் சலசலப்பு!
Seeman new strategy ahead of the 2026 elections Seeman giving seats based on caste There is a stir in the drama of the struggling brothers
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ள நாம் தமிழர் கட்சி (நாதக), இம்முறை வேட்பாளர் தேர்வில் புதிய வியூகம் வகுக்கிறது. ஆனால், அந்த வியூகம் கட்சிக்குள் அதிருப்தியும் கலகக் குரல்களையும் எழுப்பியுள்ளது.
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியலில் அடியெடுத்து வைத்ததிலிருந்து “சாதியற்ற சமூகம்” என்ற கோஷத்தை முன்வைத்து வந்தவர். பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பு வழங்கியதும், சாதி அடிப்படையிலான அரசியலை எதிர்த்ததும் அவரது அடையாளங்களாகக் கருதப்பட்டன. ஆனால் இம்முறை வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்படும் விதம், கட்சியின் அடிப்படை கொள்கைகளையே கேள்விக்குள் கொண்டு வந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, சீமான் தலைமையில் சாதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை “எந்த தொகுதியில் எந்த சமூகத்தினர் அதிகம் உள்ளனர்” என்கிற கணக்கீடு பின்பற்றப்படவில்லை. ஆனால் இப்போது அந்த வழக்கம் நாதகத்திலும் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
உதாரணமாக, திருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூர் தொகுதி குறிப்பிடப்படுகிறது. அந்த பகுதியில் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்கு வங்கி அதிகம் உள்ளது என்பதால், அங்கு அதே சமூகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவரை வேட்பாளராக சீமான் அறிவித்துள்ளார். இதை முன்னிட்டு மருது சகோதரர் விழா திருவெறும்பூரில் நடத்த திட்டமிட்டிருப்பதும், கட்சிக்குள் கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இதனால், “அடிப்படை மாற்றம் தான் எங்கள் நோக்கம்” என்று கூறி வந்த சீமான், இப்போது அதற்கே எதிராக நடந்து வருகிறார் என சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், இம்முறை வேட்பாளர் பட்டியலில் பிராமண சமூகத்திற்கும் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய தேர்தல்களில் மயிலாப்பூர் அல்லது கும்பகோணம் போன்ற சில இடங்களில் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் 4 பிராமணப் பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இந்த புதிய தீர்மானம் கட்சிக்குள் பெரிய விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சாதி அரசியலை எதிர்த்து வந்த சீமான் இப்போது அதையே வியூகமாக்கியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு நாதகத்துக்குள் எழுந்திருக்கிறது. இதன் விளைவாக, கட்சியின் “தனித்துப் போட்டியிடும் வலிமை” பலவீனப்படுமா என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
English Summary
Seeman new strategy ahead of the 2026 elections Seeman giving seats based on caste There is a stir in the drama of the struggling brothers