இன்று இரவு அரிய முழு சந்திர கிரகணம் – கொடைக்கானலில் இலவச பார்வை ஏற்பாடு!
Rare total lunar eclipse tonight free viewing arranged in Kodaikanal
இன்று (செப்டம்பர் 2) இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அரிய முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இதனை முன்னிட்டு கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தில் (Observatory) சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அங்கு ராட்சத தொலைநோக்கிகள் மூலம் பொதுமக்கள் சந்திர கிரகணத்தை தெளிவாகக் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆராய்ச்சியாளர்கள் விளக்க உரையுடன் சந்திர கிரகணத்தின் விஞ்ஞான அடிப்படைகளை எடுத்துரைக்க உள்ளனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இன்று இரவு மட்டும் இலவச நுழைவு அனுமதி வழங்கப்படும் என வானியல் ஆய்வகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் கிறிஸ்பின் கார்த்திக் கூறியதாவது:“இன்று நிகழும் முழு சந்திர கிரகணம் இந்தியா முழுவதும் தென்படும். இதை வெறும் கண்களால் கூட காண முடியும். சூரியனிலிருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதன் நிழல் நிலவின் மீது விழுவதுதான் சந்திர கிரகணம். இதில் லைட் ஷேடோ மற்றும் டார்க் ஷேடோ எனும் இருவிதமான நிலைகள் உள்ளன.
இன்று இரவு 8:57 மணிக்கு கிரகணம் தொடங்கும். இரவு 10 மணிக்கு டார்க் ஷேடோ ஆரம்பமாகி, 12 மணி வரை நீடிக்கும். அதிகாலை 2 மணிக்கு முழு கிரகணம் நிறைவடையும். குறிப்பாக, இரவு 11:10 மணிக்கு நிலவு ‘ரெட் மூன்’ போல சிவப்பாகத் தோன்றும். சூரியக் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தில் எதிரொலித்து, சிவப்பு அலைநீள கதிர்கள் நிலவில் பிரதிபலிக்கும்போதுதான் இந்த நிகழ்வு நிகழ்கிறது,” என்றார்.
மேலும், “வீடுகளின் மாடி மேல் பகுதியிலிருந்தும், இன்று இரவு விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும் கிரகணக் காட்சி தெளிவாகக் காண முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
English Summary
Rare total lunar eclipse tonight free viewing arranged in Kodaikanal