''எங்களிடம் உள்ள குக்கரிலேயே விசில் உள்ளது"; தவெக தேர்தல் சின்னத்தை கிண்டல் அடித்த தமிழிசை சௌந்தரராஜன்..!
Tamilisai Soundararajan mocked the TVK election symbol saying The cooker we have already has a whistle
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சி முதல் முறையாக களமிறங்கியுள்ளது. அதன்படி, வரும் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த 'விசில்' சின்னம் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்று கூறப்படுகிறது. இந்த சின்னம் ஒதுக்கப்பட்ட நாளில் இருந்து இணையத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'கோட்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'விசில் போடு' பாடலும் மீண்டும் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியால் சந்திப்பில் பேசும் போது; ''எங்களுக்கு விசில் தேவையில்லை. எங்களிடம் உள்ள குக்கரிலேயே விசில் உள்ளது" என்று தவெகவின் விசில் சின்னதை கிண்டல் செய்து பேசியுள்ளார்.
English Summary
Tamilisai Soundararajan mocked the TVK election symbol saying The cooker we have already has a whistle