20 ஆண்டுகளில் 70 ஆயிரம் படுகொலைகள்; நிதிஷ் அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ள ராஷ்டீரிய ஜனதா தளம்..!
The Rashtriya Janata Dal alleges that 70000 murders have taken place in Bihar in the last 20 years
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி பாஜக கூட்டணியில், ஆட்சி நடக்கிறது. நடந்து முடிந்த பீஹார் தேர்தலில் இந்த கூட்டணி 202 இடங்கள் என அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த நிலையில், பாட்னா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் யாதவ், நிதிஷ் குமார் ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அதாவது, பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், கடந்த 20 ஆண்டுகளில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன என குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், பீகாரில் எத்தனை சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகாரில் உள்ள காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் கூட இல்லை என்றும், தேர்தலின் போது ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.10 ஆயிரம் கொடுக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
இதேபோன்று, அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடந்த வாரம், மாதேபுரா, ககாரியா மற்றும் பாட்னா நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் நிதிஷ் அரசு செயல்படுகிறது என்று நிதிஷ் அரசை குற்றம் சுமத்தியுள்ளார்.
English Summary
The Rashtriya Janata Dal alleges that 70000 murders have taken place in Bihar in the last 20 years