பிப்ரவரி 0 முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி..!
Devotees will be allowed to trek the Velliangiri hills from February 01
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 06 ஆயிரம் அடி உயரத்தில் 07-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.
இந்த கோவில் தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் உள்ள சுயம்புலிங்க தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், இந்த நடப்பு ஆண்டுக்கு வரும் பெப்ரவரி 01-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் பெப்ரவரி 01-ந் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
அத்தோடு, வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக், தீப்பிடிக்கக்கூடிய பொருகளை கொண்டு செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது.
English Summary
Devotees will be allowed to trek the Velliangiri hills from February 01