'சிவசேனா ஒரு சித்தாந்தம், அதை பாஜகவால் அழிக்க முடியாது'; உத்தவ் தாக்கரே சூளுரை..!
Uddhav Thackeray vowed that the BJP cannot destroy the Shiv Sena
ஜனவரி 15-ஆம் தேதி மும்பை உள்ளிட்ட மாநராட்சிக்கு மஹாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற்றது. இதில், 30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பா.ஜனதா அந்த மும்பை மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜனதா 89 இடங்களிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) 29 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு 65 இடங்களும், அதன் கூட்டணியில் உள்ள ராஜ் தாக்கரேவுக்கு 3 இடங்களும் கிடைத்தன.
இந்நிலையில், பால் தாக்கரேயின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது சிவசேனாவை பா.ஜனதாவால் சிவசேனாவை அழிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும், பேசியதாவது:

சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஒரு கட்சி மட்டுமல்ல; அது ஒரு சித்தாந்தம் நிறைந்த இயக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகையால் அதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று பா.ஜ.க. நினைத்தால் அது தவறு என்றும், எங்களை பா.ஜனதாவால் ஒருபோதும் அழிக்க முடியாது என்று சூளுரைத்துள்ளார். சிவசேனா இல்லை என்றால் பா.ஜ.க. ஒருபோதும் மும்பை மாநகராட்சியையோ அல்லது மாநிலத்தையோ கைப்பற்றியிருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக பணபலத்தின் பயன்பாடு அதிகரித்தது என்று குற்றம் சுமத்தியுள்ளதோடு, வாக்காளர் பட்டியல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் சந்தித்தன என்றும் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

அத்துடன், மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாங்கள் விரும்பியபடி இல்லாவிட்டாலும், நாங்கள் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சிவசேனா அதிகாரம் பெறுவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. மராட்டிய மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்காகவே அது தொடங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி அல்லாத கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று குற்றம் சுமத்தியுள்ளதோடு,01-ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதியாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சிவசேனா தொண்டர்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் 'ஜெய் மராட்டியம்' என்ற முழக்கத்திற்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள உத்தவ் தாக்கரே அனைவரும் அதை ஒரு வாழ்த்துச் சொல்லாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Uddhav Thackeray vowed that the BJP cannot destroy the Shiv Sena