'பாதுகாப்பான நாடு இந்தியா; உலக கோப்பையில் ஆடாவிட்டால் வங்கதேசத்திற்குத்தான் நஷ்டம்'; முகமது அசாருதீன்..! - Seithipunal
Seithipunal


20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக இந்தியாவுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று வங்காளதேசம் அறிவித்துள்ளது. வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து மாற்று அணியாக சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படும்  நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்கு வர மறுத்தால், வங்காளதேசத்துக்குத்தான் நஷ்டம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும், கூறியுள்ளதாவது: இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக வங்காளதேசம் கூறுவதன் காரணம் என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணி தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. அதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 

இந்த அணிகளில் எதுவும் இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக புகார் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்தியா, அனைத்து வீரர்களுக்கும் மிகவும் பாதுகாப்பான சூழலை வழங்கும் நாடு. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக வங்காளதேச அணி இந்தியாவுக்கு வர மறுத்தால், அதனால் ஏற்படும் நஷ்டம் நாகதேச அணிக்குத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கனவே தயாராகிவிட்ட நிலையில், இடமாற்றம் செய்வது மிகவும் கடினம்.உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்க முடியாது என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mohammad Azharuddin says that if Bangladesh does not play in the World Cup it will be a loss for them


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->