நாங்க ஒரே குடும்பமாக வாழ்ந்தோம்! நடிகர் மாரிமுத்து குறித்து சீமான் உருக்கம்!
Seeman warm speech on the late actor Marimuthu
பிரபல தொலைக்காட்சி தொடரில் தனது டயலாக் மூலம் சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2008ம் ஆண்டு கண்ணும் கண்ணும், 2014ம் ஆண்டு புலிவால் உள்ளிட்ட 2 படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை மாரிமுத்து தனது டப்பிங் பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய உயிரிழப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் திரை உலகினர் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாரிமுத்துவின் உயிரிழப்பு குறித்து தனியார் நிறுவனத்திற்கு அடுத்த போட்டியில் "பாடலாசிரியர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த போது எனக்கு மாரிமுத்து பழக்கம் ஏற்பட்டது.
அனைவரும் ஒரே குடும்பம் போல் பழகி வந்தோம். இருவரும் கிராமிய மண்ணை சேர்ந்தவர்கள் என்பதால் புரியாத பாசம் இருந்தது. ரொம்ப இயல்பாக நடிப்பதன் மூலமே அவர் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். மிகப்பெரிய உயரத்திற்கு வந்து கொண்டிருந்த போது திடீரென இப்படி நிகழ்ந்து விட்டது. என்னுடன் வாட்ஸ் அப்பில் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார். திடீரென அவரின் இறப்பு எனக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது" என சீமான் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman warm speech on the late actor Marimuthu