காங்கிரஸின் நீட் வாக்குறுதி ஒரு தேர்தல் அரசியல் நாடகம்!
Seeman Say About Congress Election Promise NEET
காங்கிரஸ் கட்சியின் நீட் வாக்குறுதி ஒரு தேர்தல் அரசியல் நாடகம் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
பாராளுமன்ற பொது தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழக பொறுத்தவரை வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் என்னப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு பணியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, நீட் தேர்வு நடத்தலாமா? வேண்டாமா? என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம், புதிய தேசிய கல்விக் கொள்கை, ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் நீட் வாக்குறுதி அரசியல் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசுகையில், "எங்களுக்கு தரமுடியாது என்ற கரும்பு விவசாயி சின்னத்தை சுயேச்சைகளுக்கு கொடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியை தங்களின் போட்டிக்காக பார்க்கவில்லை என்று அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அவர்களின் போட்டியில் இல்லாதவனிடம் இருந்து எதற்காக சின்னத்தை பறித்தார்கள்.
மாநிலங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீட் தேர்வு நடைபெறும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் ஒரு நாடகம். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Seeman Say About Congress Election Promise NEET