பாஜக - அதிமுக கூட்டணி முறிவு - மகிழ்ச்சியில் சீமான்!
Seeman say about ADMK BJP Alliance issue
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பை வரவேற்பதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான ஜெயக்குமாரின் கருத்தை, இரு கட்சி தொண்டர்களும் வரவேற்று சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதுநாள் வரை இரு கட்சி தொண்டர்களும் வேண்டா வெறுப்பாக கூட்டணியில் இருந்தது போன்ற நிலையை இவர்களின் கொண்டாட்டம் உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சீமான் தனது எக்ஸ் தள பதிவில், "பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன். மிகத் தாமதமான முடிவென்றாலும், சரியானதொரு முடிவு.
காங்கிரசு, பாஜக எனும் இரு இந்திய ஒன்றியக் கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்தான்.
அவை தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை, உணர்வு, உயிர், நிலம், வளம், அதனுடையப் பாதுகாப்பு, எதிர்கால நலவாழ்வு என எல்லாவற்றிற்கும் எதிரானவையே!

பாஜகவுடனான உறவைத் துண்டித்திருக்கும் இந்நிலைப்பாட்டில் அதிமுக இறுதிவரை உறுதியாக இருக்குமானால் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman say about ADMK BJP Alliance issue