விஜயலட்சுமி விவகாரம் || சீமான் கைது செய்ய வாய்ப்பு! வெளியான திடுக்கிடும் தகவல்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்  முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் "சீமான் என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இருவரும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மாலை மாற்றிக் கொண்டோம். சென்னை வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். சீமான் என்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார்.

என்னிடமிருந்து 60 லட்சம் ரூபாய் ரொக்கம் 35 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்துக் கொண்டார். எனவே என் வாழ்க்கையை சீரழித்த சீமானை கைது செய்ய வேண்டும்" என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோயம்பேடு துணை ஆணையர் உமையாளுக்கு உத்தரவிட்டார்.

அது நடைபடையில் ராமாபுரம் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமி இடம் நேற்று இரவு விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் சீமான் மீதான குற்றச்சாட்டுகளுக்கான பல ஆதாரங்களை காவல்துறையினரிடம் நடிகை விஜயலட்சுமி வழங்கியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சீமான் மீதான வழக்கு தொடர்பாக விஜயலட்சுமி இன்று  திருவள்ளூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி கூறிய தகவல்களை வாக்குமூலமாக 6 பக்கங்களுக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவள்ளூர் நீதிமன்ற நீதிபதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்ய வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman likely to be arrest in vijayalakshmi case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->