ஈரோடு || மர்ம முறையில் இறந்து கிடந்த பள்ளி ஆசிரியர் - தீவிர விசாரணையில் போலீசார்.!
school teacher murder in erode
ஈரோடு || மர்ம முறையில் இறந்து கிடந்த பள்ளி ஆசிரியர் - தீவிர விசாரணையில் போலீசார்.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. பள்ளி ஆசிரியையான இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் புவனேஸ்வரி நேற்று இரவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புவனேஸ்வரியின் உடலை பார்த்துள்ளனர்.
அப்போது, அவர் உடலில் கத்தியால் குத்தப்பட்ட கொடூர காயங்களுடன் இருந்துள்ளதை அறிந்தனர். இதையடுத்து போலீசார் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார், இந்த கொலை சம்பவம் புவனேஸ்வரியிடம் இருந்து நகைகளை அபகரிப்பதற்காக நடந்ததா? அல்லது முறையற்ற தொடர்பின் காரணமாக அவரது கணவரால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
school teacher murder in erode