தங்கை மீது பெற்றோர் அதிகம் பாசம்.. விரக்தியில் சிறுமி எடுத்த விபரீத முடிவு.!!
school student sucide in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மூத்த மகள் ஷாகித்யா. 10-ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு எட்டு வயதில் தங்கை உள்ளார்.இதனால் ஷாகித்யாவின் பெற்றோர், அவரிடம் நீ பெரியவள் என்பதால், நீ தான் தங்கையை பார்த்துக்கொள்ள வேண்டும். அவளுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்துள்ளனர்.
ஆனால் ஷாகித்யா, தன்னிடம் பெற்றோர் பாசம் காட்டுவது இல்லை என்றும், தங்கை மீது அதிகமாக பாசம் காட்டுவதாகவும் கருதியுள்ளார். இது குறித்து அவர், தனது பெற்றோரிடமும் அடிக்கடி கூறியுள்ளார்.இந்த நிலையில் ஷாகித்யாவின் தங்கை தனது தாயிடம் மக்காச்சோளம் கேட்டு உள்ளார். உடனே அவர் ஷாகித்யாவிடம் தங்கைக்கு மக்காச்சோளம் செய்து கொடு என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஷாகித்யா தனது பெற்றோர் தங்கையிடம் மட்டும் அதிக பாசம் காட்டுவதாக மனவேதனையில் இருந்துள்ளார். பின்னர், தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து பெற்றோர் கதறி துடித்த சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தினர்.
அதன் படி போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
school student sucide in coimbatore