அரசு மருத்துவமனை மருத்துவர் மீது செவிலியர் பரபரப்பு புகார்!
Salem Nurse complaints against government hospital doctor
சேலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை செவிலியர்கள் பொது நல சங்க மாநில நிர்வாகிகள் சார்பில் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது சேலம், எடப்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக நான் செவிலியராக பணியாற்றி வருகிறேன்.
இந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவர் கடந்த சில மாதங்களாக தன்னை தகாத வார்த்தைகளால் மிரட்டி மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்.

இந்த மருத்துவமனைக்கு நான் வந்த புதிதிலும் இதுபோல என்னை மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். நான் செய்யும் பணியில் ஏதாவது குறைகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
பணியை சரியாக செய்த போதும் கண்டிப்பது போல் திட்டிவிட்டு பின்னர் என்னிடம் நீ ஏன் வந்து மன்னிப்பு கேட்கவில்லை என கேட்டு துன்புறுத்தி வருகிறார்.
இதனால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மருத்துவர் மீது செவிலியர் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Salem Nurse complaints against government hospital doctor