இந்த கல்வியாண்டில் 10 வகுப்பு பாடத்தில் புதிய மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!
rummy part rejected in 10th book
தமிழகத்தில் மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் தற்போது ஆன்லைன் ரம்மி சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் பள்ளி பாட புத்தகங்களில் ஆன்லைன் ரம்மி குறித்து சில வகுப்புகளின் பாடங்களில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தன.
இதில் 6ம் வகுப்பில் இடம்பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த படப்பகுதி ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு கணித பாடத்தில் பிளேயிங் கார்ட்ஸ் சம்ஸ் என்ற பாடப்பிரிவில் சீட்டு கட்டு கணக்குகள் இடம்பெற்றிருந்தது.

இந்த பாடத்திட்டமானது கடந்த கல்வியாண்டில் அமலில் இருந்த நிலையில் வரும் கல்வியாண்டில் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதிலாக வேறு ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த சீட்டு கட்டு கணக்கு பகுதியில் ஏற்கனவே 5 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. தற்போது அந்த 5 கேள்விகளும் முழுமையாக நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிதாக 2 கேள்விகள் பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rummy part rejected in 10th book