ஆர்எஸ்எஸ் கூட்டம்.. தனியார் பள்ளிக்கு விடுமுறை.. மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகையில் இயங்கி வருகின்ற தனியார் பள்ளி ஒன்றில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தேசிய தலைவரான மோகன் பகவத் தலைமையில் தேசிய அளவில் ஆர்.எஸ்.எஸ் உயர் மட்ட குழு கூட்டமானது நடந்து வருகிறது. இந்த கூட்டமானது கடந்த திங்கள்கிழமை துவங்கி நாளை வரை நடக்க உள்ளது.

எனவே, இந்த கூட்டம் நடைபெறும் காரணத்தால் குறிப்பிட்ட தனியார் பள்ளிக்கு பள்ளி நிர்வாகம் ஒரு வார கால விடுமுறை அறிவித்தது. இத்தகைய நிலையில், முறையான அனுமதி பெறாமல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RSS meeting Holiday for private school District Education Officer notice in Ooty


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->