மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு.! - Seithipunal
Seithipunal


மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனையடுத்து ரூ.5 கோடியில் சுற்றுசுவர் மட்டும் கட்டப்பட்ட மருத்துவமனை மற்றும் கல்லூரி வளர்வதற்கான பணிகள் என்ன தொடங்கப்படாமல் உள்ளது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மிக கடுமையாக எதிரொலித்தது. தற்போதைய சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை கடுமையாக கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்த திட்ட ரூ.1977 கோடியில் ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் தற்போது ரூ.1500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும், மீதி தொகை அக்டோபர் 26ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனால் இனி கட்டுமான பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 1,500 crore allocated for Madurai AIIMS Hospital


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal