12, 13 வயது குழந்தைகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்த தமிழக அரசு! ஆளுநரால் சிக்கலில் சிக்கிய இறையன்பு! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்புக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அவரின் பேட்டி ஆளும் தமிழக அரசை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆளுநரின் பேட்டிக்கு ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆளுநரின் பேட்டி காரணமாக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

ஆளுநர் நேற்று அளித்த பேட்டியில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இரு விரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார்.

மேலும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த சோதனை செய்வது குழந்தைகளின் உரிமை மீறல் என்றும் ஆளுநர் குற்றம் காட்டி இருந்தார். 

குறிப்பாக இந்த கன்னித்தன்மை சோதனையால் இரண்டு சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆளுநர் தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

ஆளுநரின் பேட்டியை அடுத்து தலைமைச் செயலாளர் இறையன்புக்கு விளக்கம் அளிக்க கோரி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RN Ravi issue Notice issue to Iraiyanbu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->