திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் 107 கிராம் தங்கம் திருட்டு: போலீசார் விசாரணை..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும்.

மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

உலக பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட பொக்கிஷங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து இந்தக் கோயிலுக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பத்மநாபசுவாமி கோயில் கதவில் தங்கத் தகடுகள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று பாதுகாப்பு அறையில் உள்ள தங்கத்தை கணக்கிட்டபோது அதில் 107 கிராம் தங்கம் காணாமல் போயிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigating theft of 107 grams of gold from Padmanabhaswamy temple in Thiruvananthapuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->