ஜம்முவின் நக்ரோட்டா ராணுவ மையம் பகுதியில் தாக்குதல்: மர்ம நபருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர் காயம்..!
Attack in Jammu Nagrota military base area Indian soldier injured in gunfight with unidentified person
ஜம்முவில் உள்ள நக்ரோட்டா ராணுவ மையத்தில் மர்ம நபருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஒயிட் நைட் கார்ப்ஸ் ராணுவ பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சுற்றுவட்டாரத்தில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்டறிந்ததும், நக்ரோட்டா ராணுவ மையத்தில் வீரர்கள் எச்சரிக்கை அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், சந்தேக நபருடன் சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டைக்கு வழிவகுத்தது. சென்ட்ரி வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும், ஊடுருவியவர்களை பிடிக்க தேடுதல் பணிகள் நடந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும் நக்ரோட்டா உட்பட, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பல பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Attack in Jammu Nagrota military base area Indian soldier injured in gunfight with unidentified person