இளம் பெரியார் யார்...? - ஈரோடு மேடையில் ஆதவ் அர்ஜுனா ஆவேச கேள்வி...! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் நடைபெற்ற த.வெ.க. மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக உரையாற்றினார்.“செங்கோட்டையன் இணைந்த பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது.

ஈரோடு மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் இந்த ஆட்சியின் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் டாஸ்மாக்கை மட்டும் நடத்தும் நிர்வாகத்தையே வழங்குகிறார்கள்.

இந்த நிலையை மாற்ற முடிந்தால், அது த.வெ.க.வால்தான்” என அவர் சாடினார்.இளைஞர் மாநாடு குறித்து கடுமையாக விமர்சித்த அவர்,“இளைஞர்களே இல்லாத இளைஞர் மாநாடு! அப்பா–மகன் என்ற இரண்டு பேரை வைத்து ‘இளம் பெரியார்’ என்கிறார்கள். பெரியாரின் வரலாறே தெரியாதவர்களுக்கு அந்தப் பெயரைச் சொல்லத் தகுதியா?” எனக் கேள்வி எழுப்பினார்.

“70 ஆண்டுகளாக ஈரோட்டு மண்ணில் நடந்த உழைப்பையும் போராட்டத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ‘இளம் பெரியார்’ என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. பெரியார் போன்ற தலைவர் இன்னும் உருவாகவில்லை; இனியும் உருவாக முடியாது” என அவர் கூறினார்.

மேலும்,“ஒரே பெரியார், ஒரே தீரன் சின்னமலை, ஒரே அம்பேத்கார், ஒரே காமராஜர். இந்த தலைவர்களை அவமதித்தால், த.வெ.க. களத்தில் இறங்கும். 2026, 2031 என்று நாங்கள் தொடர்ந்தே செல்வோம்.

மக்களிடமிருந்து விஜய்யை பிரிக்க நினைத்தார்கள்; ஆனால் மக்கள் சக்தியும், பெண்கள் சக்தியும் அதை அனுமதிக்காது” என்று முழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who young Periyar Adhav Arjunas passionate question Erode stage


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->