மொபைலில் இருந்து டிவிக்கு...! இன்ஸ்டா ரீல்ஸ் புதிய அவதாரம்...!
From mobile TV Insta Reels new avatar
சமூக வலைத்தள உலகில் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இன்ஸ்டகிராம் மாறியுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 48 கோடி பயனர்கள் இந்த செயலியை தினசரி பயன்படுத்தி வருகிறார்கள்.
தொடக்கத்தில் புகைப்படங்களை மட்டும் பகிரும் தளமாக இருந்த இன்ஸ்டகிராம், காலப்போக்கில் குறுகிய வீடியோக்கள் (Reels) வசதியை அறிமுகப்படுத்தி பயனர்களை கவர்ந்தது.இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, இன்ஸ்டா ரீல்ஸ் நெட்டிசன்களின் புதிய அடிமை ஆக மாறியது.

குறிப்பாக இன்றைய 2K கிட்ஸ், தலை நிமிராமல் செல்போன் திரையில் ரீல்ஸ்களையே பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகள் சாதாரணமாகிவிட்டன. அதிக லைக்ஸ், ஷேர்ஸ் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் விதவிதமான ரீல்ஸ்களை உருவாக்கி பதிவிட்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது தரப்பினரையும் ஈர்த்துள்ள இன்ஸ்டா ரீல்ஸ், இனி மொபைல் திரையைத் தாண்டி டிவி திரையிலும் வர தயாராகிறது.
இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம் மெட்டா, டிவிகளில் ரீல்ஸ்களை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.முதல் கட்டமாக அமெரிக்காவில் Amazon Fire TV ஸ்ட்ரீமிங் தளத்தில் இந்த வசதி சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மெட்டா நிறுவனர் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
English Summary
From mobile TV Insta Reels new avatar