'நன்றி ஈரோடு'...! - விஜய் பகிர்ந்த செல்பி வீடியோ இணையத்தில் வைரல்...!
Thank you Erode Selfie video shared by Vijay goes viral internet
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில், இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் அரசியல் உற்சாகத்தில் களைகட்டியது.
இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

பொதுக்கூட்ட மைதானத்தை வந்தடைந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு, வழிநெடுக தொண்டர்கள் ஆரவாரமான வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் உரையாற்றிய விஜய், ஆவேசமான உரையை முடித்ததும் பிரசார வாகனத்தில் நின்றபடியே தொண்டர்களுடன் செல்பி வீடியோ பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், விஜய்க்கு வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்து, “நன்றி ஈரோடு” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Thank you Erode Selfie video shared by Vijay goes viral internet