விஜயமங்கலத்தில் அரசியல் அதிர்வு..! விஜய்க்கு செங்கோட்டையன் வைத்த பட்டம் என்ன தெரியுமா...?
Political resonance Vijayamangalam Do you know what title Sengottaiyan Vijay
ஈரோடு அருகே உள்ள விஜயமங்கலம் சரளை பகுதியில், இன்று (வியாழக்கிழமை) தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் அரசியல் திருவிழா போல களைகட்டியுள்ளது.
இதற்காக சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு, த.வெ.க. தலைவர் விஜய், இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கிருந்து காரில் விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு புறப்பட்ட அவருக்கு, வழி நெடுக தொண்டர்களின் உற்சாக வரவேற்பு குவிந்தது. இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்த தொண்டர்கள், விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பொதுக்கூட்ட மைதானத்துக்கு விஜய் வருகை தந்ததும், தொண்டர்கள் உற்சாகக் கோஷங்களால் வானமே அதிர்ந்தது. இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.
ஏற்கனவே, கூட்டம் நடைபெறும் மைதானம் தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,“பெரியார் பிறந்த மண்ணுக்கு விஜய் வந்திருக்கிறார். ரூ.500 கோடி வருமானத்தை உதறிவிட்டு, மக்களுக்காக அரசியலுக்கு குதித்துள்ளார்.
வரலாறு படைக்க பெருந்திரளான கூட்டம் இன்று இங்கு கூடியுள்ளது. முன்னர் புரட்சித்தலைவரை பார்த்தேன்; இன்று புரட்சி தளபதி விஜய்யை காண்கிறேன்” எனக் கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
English Summary
Political resonance Vijayamangalam Do you know what title Sengottaiyan Vijay