உலக அழகி போட்டி 2025: பலத்த பாதுகாப்புடன் ஐதராபாத்தில் தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 05 மணி முதல் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் அமல் படுத்தப்பட்டது. ஆனாலும் அதனை மீறி எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி மீண்டும் தாக்குதலை நடத்தியது. இதனால் இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.

நாட்டில் நிலவும் அசாதார சூழ்நிலை காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பாதுபாப்பு பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில், நேற்று மிஸ்வேர்ல்ட் உலக அழகி போட்டி தொடங்கியுள்ளது.

எதிர்வரும் 31-ஆம் தேதி வரை இந்த பிரபஞ்ச அழகி போட்டி நடைபெறவுள்ளது. குறித்த உலக அழகி போட்டிக்கு வெவ்வேறு நிகழ்வுகளுக்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

கிட்டத்தட்ட 120 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,  111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஐதராபாத் வந்துள்ளனர். உலக அழகி போட்டி ஐதராபாத் கச்சிபவுலி உள் விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 31-ஆம் தேதி ஹைடெக்ஸில் பிரமாண்டமான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Miss World 2025 Starts in Hyderabad with heavy security


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->