மும்பை, கொல்கத்தாவில் சீரான சேவை…சென்னை மட்டும் ஏன் ரெயில் சேவையில் சிக்கல்...? - சு. வெங்கடேசன் கேள்வி
Regular service Mumbai and Kolkata why there problem train service only Chennai S Venkatesan questions
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம்யில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவாகி, பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த நிலை குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ரெயில் சேவையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரெயில்வே துறை நிர்வாகத் தவறால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள சு. வெங்கடேசன், சமூக வலைதளமான X-ல் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது,"ரூ.2,450 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வரும் மும்பை ரெயில் நிலையம் பணிகளால் புறநகர் ரெயில்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. அதேபோல் சீல்டா ரெயில் நிலையம் நடைமேடை விரிவாக்கப் பணிகளின் போது கூட, சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே சேவை நிறுத்தப்பட்டது.
ஆனால், ரூ.734 கோடியில் புதுப்பிக்கப்படும் எழும்பூர் நிலையப் பணிக்காக 45 நாட்களாக தினமும் சுமார் 2.5 லட்சம் பயணிகள் அவதிப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
சென்னை நகரின் போக்குவரத்து நரம்பு மண்டலமே சீர்குலைந்துள்ளதாகவும், இந்த நிர்வாக அலட்சியத்துக்கு ரெயில்வே அமைச்சர் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Regular service Mumbai and Kolkata why there problem train service only Chennai S Venkatesan questions