மின்னஞ்சல் பரபரப்பு…! கோவை நீதிமன்ற வளாகம் வெடிகுண்டு மிரட்டல்...! - காவலர்கள் தீவிர சோதனை...!
Email panic Bomb threat at Coimbatore court complex Police conduct intensive search
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் வக்கீல்கள் பயிற்சி மைய அலுவலகத்தில் இன்று காலை வழக்கம்போல் பணியாளர்கள் இ-மெயில்களை பரிசோதித்து கொண்டிருந்தனர்.
அப்போது வந்திருந்த ஒரு மின்னஞ்சலில், கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு பதுக்கப்பட்டு, அது விரைவில் வெடிக்கக்கூடும் என மிரட்டல் தகவல் இடம்பெற்றிருந்தது.

இதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவல் கிடைத்தவுடன் காவலர்கள் மோப்ப நாய் படை மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கோவை நீதிமன்ற வளாகம் சென்றடைந்து முழுமையான சோதனையை மேற்கொண்டனர்.
மேலும், நீதிமன்ற வளாகத்தின் ஒவ்வொரு மூலையும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட நிலையில், நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால், அது வெறும் மிரட்டல் மின்னஞ்சல் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நிம்மதி மூச்சு விட்டனர்.இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், முன்பு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் கோவை மற்றும் சில பள்ளிகளுக்கும் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய அதே நபரே இந்த மின்னஞ்சலையும் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
Email panic Bomb threat at Coimbatore court complex Police conduct intensive search