இறப்பிலும் எடுத்துக்காட்டு...! உடலை மருத்துவக் கல்விக்குத் தானம் செய்த நல்லக்கண்ணு...!
example even death kind hearted man who donated his body medical education
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த போராட்டச் சின்னமாக விளங்கிய தோழர் நல்லக்கண்ணு இன்று இயற்கை எய்தினார்.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்காக அவர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிற்பகல் 1.55 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது மறைவு செய்தி மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக பொதுப் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
மேலும், தனது விருப்பத்தின்படி, அவரது உடல் மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுகளுக்காக நாளை சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.
English Summary
example even death kind hearted man who donated his body medical education