ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: ராணுவம் கடும் பதிலடி கொடுத்து வருகிறது: விக்ரம் மிஸ்ரி பேட்டி..! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் படி, நேற்று மாலை இன்று போர்  நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. ஆனால் குறித்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு- காஷ்மீர் பகுதிகள் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவசர செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது, அவர் கூறியதாவது: "கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே இன்று மாலை ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் கடந்த சில மணி நேரங்களாக இந்தப் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது என்றும், இந்த தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும், இதற்குப் பாகிஸ்தான் தான் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் இந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தாக்குதலை உடனடியாக நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், நிலைமை குறித்து ராணுவம் மிகுந்த விழிப்புடன் உள்ளதாகவும், சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் மீண்டும் மீண்டும் நிகழும் மீறல்களை அதிக பலத்துடன் கையாள ராணுவத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் வெளியுறவு செயலர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The army is giving a strong response to Pakistan attack that violated the agreement Vikram Misri interview


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->