கருப்பாக மாறிய ஒன்றரை வயது குழந்தையின் வலது கை - ராஜீவ் காந்தி மருத்துவமனையில்
right hand changed black colour of one and half year old boy in chennai rajeev gandhi hospital
கருப்பாக மாறிய ஒன்றரை வயது குழந்தையின் வலது கை - ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர் தனது ஒன்றரை வயது மகன் முகமது மகிருக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைகாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போட்டு, அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே குழந்தைக்கு ‘ட்ரீப்ஸ்’ போடப்பட்ட இடத்தில் கறுப்பாக மாறியதுடன், வலதுகையிலிருந்து முட்டி பகுதி வரை செயலிழந்தும் உள்ளது. இதைபார்த்து பயந்துபோன தஸ்தகீர் மருத்துவரை அழைத்து வந்துள்ளார். அவர்கள் பரிசோதனை செய்துவிட்டு வலதுகையை அகற்ற வேண்டும் என்றுத் தெரிவித்து, மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குழந்தையின் தந்தை தஸ்தகீர், “குழந்தைக்கு ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளித்து வருகிறோம். ராஜீவ் காந்திமருத்துவமனையில், ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்ட பிறகு, கை கருப்பாக மாறியது. மருத்துவர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

தொடர்ந்து கையின் நிலை மோசமானதால், மருத்துவர் ஒருவர், ‘ஆயின்மென்ட்’ எழுதிக் கொடுத்தார். அது,மருத்துவமனையில் இல்லை என்றதால் வெளியே இருந்து வாங்கி வந்து பயன்படுத்தியும் பயன் இல்லை. தற்போது கையை அகற்ற வேண்டும் என்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்’’ என்றுத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறுகையில், ‘‘குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததால், சில பிரச்சினைகள் இருந்துள்ளது. அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலரின் கவனக்குறைவால் குழந்தைக்கு இந்நிலை ஏற்பட்டிருந்தால், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தெரிவித்தார்.
English Summary
right hand changed black colour of one and half year old boy in chennai rajeev gandhi hospital