செல்பி எடுக்கும் போது 1500 அடி பள்ளத்தில் வீழ்ந்த இளைஞர்.. 8 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..! - Seithipunal
Seithipunal


செல்பி எடுக்கும் பொழுது 1500 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் உடல் 8 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை 8 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று மலையேற்றத்துக்கு சென்றது. அப்போது அவர்கள் ரெட் ராக் என்ற தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றனர். மேலும் அந்த பக்கத்திலேயே அமர்ந்து மதுவும் அருந்தியுள்ளனர்.

அந்த குழுவில் பயணித்த ராம்குமார் என்ற நபர் ரெட் ராக்கின் முனையில் நின்று செல்பி எடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 1500 பள்ளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்புத் துறை உதவியுடன் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை காலை ட்ரோன் உதவியுடன் தேடுதல் பணியை தொடங்கிய போது உடல் அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரின் உடலை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

 அந்த பகுதியில் பலத்த பனிமூட்டம் காரணமாக உடலை மீட்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. எட்டு நாட்களுக்கு பின் அவரின்  உடலை சாக்கு பையில் வைத்து கட்டி 2000 அடி நீள ராட்சத கயிற்றின் உதவியுடன் மேலே இழுத்து வந்தனர். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று இனி விபரீத விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Recovery of the body of a young man who fell into a 1500-foot abyss


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->