ரேசன் அரிசி கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் - ராதாகிருஷ்ணன்.!
Ration shop smuggling strict action Radhakrishnan
தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில் தமிழகத்தில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரேசன் ஊழியர்கள், அரிசியை விற்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
English Summary
Ration shop smuggling strict action Radhakrishnan