பலாத்காரம் செய்து கொலையா...? கோவை புதருக்குள் அரை நிர்வாண நிலையில் அழுகிய சடலம்! - மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் அதிரடி சோதனை...! - Seithipunal
Seithipunal


கோவை அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் கொலையா? அல்லது பாலியல் வன்கொடுமைக்கு பிறகான கொடூர சம்பவமா? என்ற கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையிலிருந்து பாலக்காடு நோக்கிச் செல்லும் சாலையில் சுகுணாபுரம் அருகே உள்ள மேற்கு புறவழிச்சாலை பகுதியை ஒட்டிய காட்டுப்பகுதியில், புதருக்குள் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் உயிரிழந்து கிடப்பதாக குனியமுத்தூர் காவலர்களுக்கு அவசர தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை மாநகர தெற்கு துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது மஞ்சுப்பள்ளம் காட்டுப்பகுதியில் அடர்ந்த புதருக்குள் இளம்பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டது.

உடனடியாக சடலத்தை மீட்ட காவலர்கள் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர். உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், வெளிப்புற காயங்கள் அல்லது தாக்குதல் தடயங்கள் உள்ளனவா என்பதை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.இதையடுத்து மோப்பநாய் படையினரும் கைவிரல் ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடி மீண்டும் திரும்பி வந்ததாக தெரிகிறது. அதேசமயம், கைவிரல் ரேகை நிபுணர்கள் உடலில் ஏதேனும் தடயங்கள் பதிவாகியுள்ளனவா என்பதை ஆய்வு செய்தனர்.பின்னர் இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

உயிரிழந்த இளம்பெண் யார்? அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர்? எப்போது, எப்படி உயிரிழந்தார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த பகுதி மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், வழக்கு மதுக்கரை காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது,"உயிரிழந்த இளம்பெண்ணின் ஒரு கையில் ‘ஜெகன்’ என்ற பெயரும் அதற்கருகில் இதய வடிவ பச்சைக் குத்தும் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு கையில் ‘எஸ்’, ‘ஜெ’ என்ற ஆங்கில எழுத்துகளும் பச்சைக் குத்தப்பட்டிருந்தன. அவருக்கு சுமார் 25 வயது இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்பின் முழு பின்னணி தெளிவாகும் என காவலர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rape or murder half naked decomposed corpse found bushes Coimbatore Sniffer dogs and fingerprint experts conduct investigation


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->