பெற்றோரின் சண்டையால், பயந்து போய் ஓடிய சிறுவனுக்கு வாசலில் காத்திருந்த எமன்.! ராணிப்பேட்டையில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தண்டலம் பகுதியில் ஏரிக்கரை தெருவில் துளசி என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய 8 வயது மகன் மணிகண்டன் அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

நேற்று இரவு நேரத்தில் மணிகண்டனின் பெற்றோர் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரது சண்டையையும் பார்த்த சிறுவன் மணிகண்டன், எங்கே பெற்றோர் தன்னை அடித்து விடுவார்களோ என்ற பயத்தில் வீட்டிலிருந்து பயந்து ஓடியுள்ளான்.

அப்போது வீட்டிற்கு வெளியில் மின் இணைப்புக்காக பொருத்தப்பட்டிருந்த வயர் அருந்து கிடந்துள்ளது. இதை பார்க்காமல் ஓடிய சிறுவன் வயரை மிதித்துள்ளான். இதனால், சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்து துடித்துடித்து உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து சிறுவன் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரின் சண்டை சச்சரவால் பயந்து போன சிறுவன் மின் கம்பியை மிதித்து உயிரை விட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ranipet 8 years boy died for power wire shock


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->