தோடர் இன மக்கள் உடை அணிந்து அவர்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உதகையில் உள்ள தோடர் இன மக்கள் உடை அணிந்து அவர்களுடன் நடனம் ஆடினார். 

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில், கலந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். 

பின்னர் மோடி சமூகத்தை அவதூறாக பேசியதாக அவருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை தொடர்ந்து, அவர் எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். 

இதனை அடுத்து தற்போது அவர் வயநாடு எம்.பி ஆக மீண்டும் பதவி ஏற்றார். இந்த வழக்கு விவகாரத்துக்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று வயநாடு செல்கிறார். 

டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்து உதகையில் முத்தநாடு கிராமத்தில் தோடர் இன மக்களை சந்தித்து பேசினார். 

மக்கள் அவரை சிறப்பாக வரவேற்றனர். மேலும் ராகுல் காந்தி தோடர் இன மக்கள் உடைய அணிந்து அவர்களுடன் நடனம் ஆடினார். 

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி கூடலூர் வழியாக கேரளா மாநிலம் வயநாடு செல்ல இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi danced with the Todar people


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->