"பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1 கோடி வரை ஒப்பந்தச் சலுகை!": பொதுப்பணித்துறையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிரடி அறிவிப்புகள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை (PWD) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பொறியியல் பட்டதாரிகளுக்கான பணி வாய்ப்புகள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இளம் பொறியியல் பட்டதாரிகளுக்குச் சிறப்பு வாய்ப்பு
ரூ.1 கோடி வரை ஒப்பந்தச் சலுகை: வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ரூ.1 கோடி வரை திட்ட மதிப்புள்ள பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் (PWD Tenders) பங்கேற்கச் சிறப்புச் சலுகைகளுடன் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒப்பந்ததாரர் பதிவு எளிமையாக்கம்: புதிய பொறியாளர்கள் எளிதாகத் தொழில் தொடங்கும் வகையில், பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்களாகப் பதிவு செய்யும் வழிமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும்.

உலகத்தர உள்கட்டமைப்பு & சிறப்பு அமைப்புகள்
FSI பயன்பாடு & எழில்மிகு கட்டடங்கள்: அனுமதிக்கத்தக்க அதிகபட்ச பிரிமியம் FSI (Floor Space Index) முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, நிலத்தின் உச்சபட்ச பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் பன்னடுக்கு எழில்மிகு மற்றும் உலகத்தரமான அரசு கட்டடங்கள் கட்டப்படும்.

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம்: முன்னணித் தனியார் நிறுவனங்களுக்கு இணையான உலகத்தரத்துடன் செயல்பட ரூ.1 கோடி தொகுப்பு நிதியுடன் இக்கழகம் உருவாக்கப்படும். இதன் மூலம் பெருநகரங்கள், தொழிற்துறை மையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், ஐடி நகரங்கள் மற்றும் வணிகப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

டிஜிட்டல் நிர்வாகம் & AI தொழில்நுட்பம்
AI மூலம் மருத்துவமனைகள் பராமரிப்பு: அரசு மருத்துவமனைகளின் பராமரிப்புப் பணிகளை நவீனப்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டட மேலாண்மை முறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.

வெளிப்படைத்தன்மைக்கு புதிய செயலி: பொதுப்பணித்துறைத் திட்டங்களின் பணி முன்னேற்றம், தரக்கட்டுப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் ஒப்பந்தப் பணிகளில் முழு வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யப் பிரத்யேகச் செயலி (App) உருவாக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PWD Minister Aadav Arjuna Announces AI Infrastructure FSI Upgrades and PWD Contracting Perks for Engineering Graduates


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->