விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'விஜய் நூலகம்' புதுக்கோட்டையில் திறப்பு!
Pudukkottai Vijay library opened
புதுக்கோட்டை, மாரியம்மன் கோவில் பகுதியில் விஜய் நூலகத்தை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவரும் நகர மன்ற உறுப்பினர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதற்கு முன்னதாக விலையில்லா உணவகம், மாணவர்களுக்கு பயிலகம், இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நூலகத்தை இவர் திறந்து வைத்துள்ளார்.
அந்த பகுதி மக்கள் நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது போன்ற செயல்காலால் விஜய் ரசிகர்களை மாவட்ட தலைவர் ஒருங்கிணைக்கிறார்.

ஏற்கனவே விஜய் அரசியல் பிரவேசம் செய்ய உள்ள நிலையில் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் அதை நோக்கி பயணிக்கிறது.
இது தொடர்பாக பொதுமக்கள், எப்படி இருந்தாலும் யார் இருந்தாலும் மக்களுக்கு நன்மை கிடைத்தால் போதும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Pudukkottai Vijay library opened